நீயும், நான்போட்ட முடிச்சில் நூல்கோர்த்த பொம்மைதான்!

அறியாது விழுந்தேன்
சொல்லாது சுமந்தேன்

அறிந்ததும் திகைத்தேன்
சொல் விழுந்ததும் சிரித்தேன்

மெய்ப்பொருள் தேட அலைந்தேன்
பொருள் இல்லாதவனென பெயர்பெற்றேன்

அனைத்தையும்கூறி வழிகேட்டேன்
அண்டம் மறந்து ஏமாந்தேன்
கண்டம் கடக்கும் வழிசேர்ந்தேன்
வழியறியா தீவுக்கு விடைதந்தேன்

எனையறிந்த இறைவனிடம் அடுத்தமுடி கேட்டேன் - பதிலாக
விழுந்த முடிச்சு,
அறுந்த முடிச்சு,
அடுத்த முடிச்சு - இவையனைத்தும்
என் முடிச்சு;
நீயும், நான்போட்ட முடிச்சில்
நூல்கோர்த்த பொம்மைதான்!
நீயாக இயங்குகிறாயென நினைத்தாலும் - இவ்வுலகின்
இயக்கமனைதும் என் வசமே!

ஆகையால்,
அடுத்தநொடி இவ்வுலகில் ஏதுநடக்குமென அறியாத நீ
அடுத்தமுடிச்சுபற்றி அறிவதை விட்டுவிட்டு,
"இனிவரும் வாழ்க்கையையும்
இனிதாக ஏற்றுக்கொள்ளும்
நல்மனமாக இரு" - என பதில்கேட்டேன்.

எழுதியவர் : A பிரேம் குமார் (21-Jan-12, 6:39 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 247

மேலே