வானத்தை தொடுவோம் வா!

வாலிபா!
முகவரி இல்லாத வீடாய்
இருக்கிறாய் நீ!

மண்ணுக்குள் புதைந்த
சறுகாய் கிடக்கிறது
உன் மனம்!

எல்லையே இல்லாமல்
இருக்கிறது
வாழ்கையின் பாதை!
என்றாவது போய்
பார்த்து இருக்கியா!

முடியும் என்று
உன் உள்மனம்
சொன்னாலும் - நீ
உன் மூளைக்கு முக்காடு
போடுகிறாய்!

எவனோ ஒருவன்
படிக்காதவன் - அவன்
பணபசிக்கு இரையாகதே!

உன்னால் உருவான
ஒரு அம்பாணி போதும்!
நீ என்று சிகரத்தை தொட
போகிறாய்!

இயந்திரங்கள் உழைக்கும்
உலகத்தில் - இயந்திரமாய்
நீ உழைத்து பயன் என்ன?

உன் வலிமை தெரியவில்லை
உனக்கு!
வா வானத்தை தொடுவோம்!

எழுதியவர் : ராஜேஷ் கண்ணா (21-Jan-12, 6:35 pm)
சேர்த்தது : raghavanrajeshkanna
பார்வை : 403

சிறந்த கவிதைகள்

மேலே