என் தாயே தமிழே !

பொய்யான உடலை
மெய்யாக்கிய உயிரே
என் தாயே தமிழே !

அன்பென்னும் ஓர்
ஆயுதத்தை என்
உதிரத்தில் கலந்தவளே
என் தாயே தமிழே !

உயிர்மெய்யாய் என்றும்
என் மனதோடு இணைந்தவளே
என் தாயே தமிழே !

முடிகொண்ட முனிவரும்
படைகொண்ட மன்னரும்
உன் உறவினர்
ஆகையால் உன்
பிறப்பையும் வளர்பையும்
நான் சொல்ல தேவையில்லை
இவ்வுலகம் அறியும்
என் தாயே தமிழே !

வாழ்க தமிழ் !
வளர்க என் தாயின் புகழ் !

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 10:51 pm)
பார்வை : 461

மேலே