மறத்தமிழச்சியே எழுந்து வா!

வீ ரத்தமிழச்சி வீரம் செறிந்திருந்தாள்
உன் மகன் எங்கே ? கேட்டான் ஒருவன்
அதற்கு அவள் சொன்னாள்
தேக்கு போன்ற தேகம் நிமிர்த்தி
என் மகனா ! எந்தப் போர்க்களம் சென்றானோ!
அந்தப்புலி வாழ்ந்த குகை
இதோ ! என்று வயிற்றைக் காட்டி நின்றாள்!

இது புறம் கூறும் செய்தி
புகழ் பாடும் செய்தி

மற்றொரு தமிழச்சி
மகன் போரிலே ! புறமுதுகு காட்டினான் கேள்விப்பட்டாள்
வளைக்கரங்களில் வாளேந்தி சூழுரைத்தாள்
அவ்வாறு அவன் செய்திருந்தால்
பாலுண்ட அங்கங்களை சிதைத்திடுவேன்! என்று

வாளோடு போர்க்களம் போனாள்
வாளினால் பிணங்களைப் புரட்டினாள்
அங்கே! அழகு மகன்
மார்பிலே வேலேந்தி மாண்டு போயிருந்தான்
ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தாள்

இவளன்றோ ! வீரத்தமிழச்சி!
இவளன்றோ! மானத்தமிழச்சி!

இன்னுமொரு காட்சி
வறுமையில் வாடுகிறாள் ஒருத்தி
பசியோடு காய்ந்த மார்பகத்தை முட்டுகிறது
குழந்தை!
பாலின்றி பசியால் அழுகிறது
இயற்கை உணவு இல்லை
ஆதலால் செயற்கை உணவை நாடுகிறாள்
பானையில் எதுவும் இல்லை
மரப்புலி காட்டி விளையாடிப் பார்த்தாள்
அழுகை நின்ற பாடில்லை

அந்தோ! பரிதாபம்!
இப்படி ஒரு காட்சியையும்
சங்க இலக்கியம் காட்டுதம்மா!

நிலப்பிரபுத்துவம் தொடங்கி இன்று வரை
தொடரும் வறுமையின் காட்ச்சியம்மா!

இன்றுள்ள வீரத்தமிழச்சியே!
பொங்கட்டும் உன் வீரம்!
நான் முன் சொன்ன வீரத்துடனே
பின் சொன்ன வறுமையை போக்க
எழுந்து வா! தமிழச்சியே! எழுந்து வா!

எழுதியவர் : porchezhian (31-Jan-12, 7:31 pm)
பார்வை : 286

மேலே