கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 2 பா 5 6 7 8 9 10

கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 2 பா 5 6 7 8 9 10
5.
கர்ம துறவெனும் சாங்கியயோ கத்தையும்
கர்ம தொடர்பான கர்மயோ கத்தையும்
ஒன்றாக காண்போன் எவனோ அவனேதான்
நன்குண்மை யைக்காண்ப வன்
6.
கருமம்செய் யாதுகர்ம சந்நியாச மிங்கு
அரிதாம் பெருந்தோளாய் நீயும் அறிவாய்
கருமம் இயற்றும் முனிவன் விரைந்து
பிரும்மத் தினைஅடை வான்
7..
கர்மயோகத் தைப்பின்பற் றும்தூய நெஞ்சினன்
கர்மவுடல் இந்திரியம் தன்னையும் வென்றவன்
சர்வாத்மா வையும் தனதாத்மா வில்காண்பான்
கர்மம்செய் தாலும்ஒட் டான்
8