கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 2 பா 8 9 10

கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 2 பா 8 9 10
8 , 9
தத்துவம் தன்னை அறிந்தவோர் நல்யோகி
எத்தைத்தான் பார்க்கினும் கேட்கினும் பேசினும்
எத்தை அருந்தினும் கண்திறந்தும் மூடியும்
என்னென்ன செய்கைகள் செய்தும் நினைப்பான்
புலன்வழி போகிறது இப்பொறிகள் என்றிருப்பான்
தான்செய்வ தாய்நினை யான்
10 .
பிரும்மம் தனிலே அடைக்கல மானோன்
கருமத்தை செய்திடுவான் பற்றேது மின்றி
பெருநீரில் தாமரைப் பூவிலைஒட் டாமல்
இருப்பதுபோல் ஒட்டான் அவன்