தமிழ் வெல்ல உயிர் கொடுப்போம்....!
தாமரை இலையில் தண்ணீர் - வளர்
தென்னை இளநியில் நன்னீர் - மழைச்
சாரல் தூவிய பன்னீர் - இவைதான்
இயற்கையின் ஆனந்தக் கண்ணீர்...!
ஆறுகடல் நதிஏரிகள் மண் நீர் - கதிர்
ஆவிஎடுக்க ஆகாய விண் நீர் - முகிலுடைந்து
அருவி விழ மலைமீது காணீர் - இயற்கை போல்
ஆனந்தம் வேறெங்கும் காணீர்.....!
பாடல்கள் தமிழில் இளநீர் - தமிழ்ப்
பண்பாடு இனிதென அறிவீர் - தமிழ்
பழக அகம் மகிழ வாரீர் - வீரத் தமிழ் நம்
பார் வெல்ல ஆதரவு தாரீர்...!
பனைமரத்தில் தமிழிருக்கும் பாரீர் - இன்சுவை
பார்க்கையிலே புறிவீர் அது பதநீர் - அதை நீர்
நேச்சுரல் என்றே இனி சொல்லீர் - தமிழ்
நெஞ்சங்களே இயற்கை என்று சொல்வீர்....!
தாமரை இலையில் தண்ணீர் - விரும்பாது விலக
தமிழனே இங்க்லீஷ் கழிவுநீர் - விரும்பியதேனோ..?
குருதி உனக்கு ஆகலையோ வெந்நீர் - வீணாய்
கொட்டி சீரழிகிறதே தமிழ் அமுதநீர்...!
ஆங்கில உச்சரிப்பில் நாசுரக்கும் நச்சுநீர்
அழகு தமிழ் கூற வாய்பருகும் தேநீர்...!
கண்ணெதிரே மாயை கானல் நீர் - அதுபோல்
கவர்கின்ற பிறமொழிகள் என அறிவீர்...!
நா பிளந்து போன நல்ல தமிழா - இனியேனும்
தாமரை இலை மேல் தண்ணீர் போல...
தமிழில்லா பிறமொழி மேல் .நாமிருப்போம்....
தமிழ் வெல்ல நம் உயிர் கொடுப்போம்....!