தீவிர-வாதம்
நீயா? நானா?
ஒவ்வொரு மனிதனுக்குள் ஓடும்
இந்த தீவிரமான வாதம்
தான் செய்த தவறுகளுக்கு
தானே சிறந்த வக்கீல்
பிறர் செய்த பிழைகளுக்கு
நானே சிறந்த நீதிபதி
தான் செய்த பிழைகளாயினும் சரி
பிறர் செய்த அதிசயங்களாயினும் சரி
யாவும் தற்செயலாக நடந்தது
தான் தொட்டது
முள்ளில் உள்ள ரோஜாவை
அவன் தொட்டது
ரோஜாவில் உள்ள முள்ளை
சாதியிலே சிறந்தது என்னுடயது
பாவிகளின் ஒருகூட்டம் உன்னுடையது
நான் செய்ததை நீ செய்தால் தழுவல்
நீ செய்ததை நான் செய்தால் தற்செயல்
இப்படியாக தன்னை காத்துக்கொள்ள
போராடும் இந்த மனிதன்
வாழவும் பயப்படுகிறான்
சாகவும் பயப்படுகிறான்
முல்லில் விழுந்த துணியை எடுப்பது போல்
பதம் பார்த்து வாழ்கிறான்
இவ்வாறு தீவிர வாதத்தில் வாழும்
ஒவ்வொருவரும் தீவிர-வாதிகள்!