தருமத்தின் தடத்தில்.
கொடுமைக்கும் கடுமைக்கும்
கொடிய தளவாடங்கள்
வெளிக் காரணமானாலும்,
கொடிய மனோபாவமே
உண்மைக் காரணமாகும்.
எனவே மனோபாவ மர்மங்களில்
சத்துவ தர்மங்களை......
முடிந்தவரை நிரப்பினால் அல்லது பரப்பினால்
கருமங்களில் சிரமங்கள் மறையும்.
அன்பிற்கும் பண்பிற்கும்
அது அஸ்திவாரமாகி
அமைதியையும் ஆனந்தத்தையும்
அகிலத்தில் கொணரும்.
எனவே சிந்தையும் செயலும்
தருமத்தின் தடத்தில் செல்க.
பாலு குருசாமி.