சிரிக்கும் சிலையாய்

வளை ஓசையுடன்
கொலுசு ஒலியும்
இணைந்து ஒலிக்க
அசைந்து வந்தது
ஒரு தாவணித் தென்றல்
ஆலயத்தின் முன்பு

திரும்பிப் பார்த்தேன்
சித்திரையில் வந்த
மார்கழிப் பனியாய்
சிரிக்கும் சிலையாய்
நின்றாள் அவள்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Feb-12, 5:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 240

மேலே