உன்னில் நான்...

கவிதை ஒன்று கேட்கிறாய்..
எப்போது எழுத நான்..?
உன் குளியலறைக் கொக்கியில்
தொங்கித் தவமிருக்கும் டவலாய்,
உன் துளசிமாடப் பூஜையில்
நெற்றி வழி கீழிறங்கும் நீர்த்திவளையாய்,
நீ உடை மாற்றும் உள்ளறையில்
நிரந்தர நிலைக்கண்ணாடியாய்,
உன் சமையலறைச் ஜிவாலையில்
சிற்றிடை சிந்தும் சின்ன வியர்வையாய்,
உன் பூனை முடிக்கழுத்திலிருந்து இரண்டருவியாய்
கொட்டும் த(அ)ங்கச்சங்கிலியாய்,
உன் சன்னலோரத்தில் சிணுங்கும்
சின்னச்சாரலாய்,
நீ விரும்பி ஹம்மும் ராகதேவனின்
ரம்மிய இசையாய்,
நீ ரசிக்கும் பூந்தோட்டத்தில் புகுந்த
புதிய மலராய்,
நீ அணைக்கும் அனைத்துமாய்,
உனை அணைக்கும் அனைத்துமாய்,
பருவப்பரபரப்பில் திளைக்கிற என்னை,
கவிதை ஒன்று கேட்கிறாய்..
எப்போது எழுத நான்..?

எழுதியவர் : (14-Feb-12, 8:42 am)
Tanglish : unnil naan
பார்வை : 327

மேலே