வசுவசமுத்திரத்தில் வானத்திருவிழா

வசுவசமுத்திரத்தில் வானத்திருவிழா

வனப்பு முகுந்த ஊரான வசுவசமுதிரத்தில், நம் பார்வை செல்லும்மிடமெல்லாம் பசுமை,பூத்துக் குலுங்கும் பூக்கள் ,காய்துக் கண் கவரும் கனிகள். இப்படி வர்ணிக்க ஆசைதான்
ஆனால்
உண்மை உறுத்துகிறது ......
கல்பாக்கத்திற்கு சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வசுவசமுதிரம் கிராமம்.ஒத்தையடி பாதை,கூரை வீடுகளின் ஆதிக்கத்திலிருந்து மீலாத கிராமவாசிகள் கிரேட்லேக்ஸ் கர்மயோகா குழு மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் குழுவோடு அக் கிராமத்திற்குள் நுழையும்போது இரவு ஏழு மணி.
வருங்கால இந்தியாவின் எதிர்காலமான இளைய சமுதாயத்திற்கு அறிவியல் அறிவை அறிவிக்கும் மிகப்பெரிய பொறுப்பில் 'கர்மயோகா குழு மாணவர்கள் செயல்படுகின்றனர்.
வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை,கோள்களை,நிலவை பக்கத்தில் டெலஸ்கோப் மூலம் கண்டு இரசிக்க குழந்தைகள் கூட்டம் . வசுவசமுதிரத்தில் நுழையும்போது அங்கு மின்சாரம் இல்லை. இங்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்காதாம், கிராம குழந்தைகளின் சட்டையில்லா வெற்றுடம்பை விண்மீன் வெளிச்சமிட்டு காட்டியது.
அறிவியல் ஆராய்சியாளர் பார்த்த சாரதி 'உங்களுக்கு தெரிந்த கோள்களை சொல்லுங்கள் என்று சொன்னது தான் தாமதம்
புதன், வியாழன்,வெள்ளி,சனி,செவ்வாய்,சுக்கிரன் என்று குழந்தைகள் கோரசாக சொன்னது ஆச்சர்யமூட்டியது.
'டெலஸ்கோப்பை ஆட்டாமல் பாருங்க இல்லைனா 'வெள்ளி' உடைஞ்சிடும் என்று உசார் படுத்தினார் அறவியல் ஆய்வாளர் ஜெயவேல்.
'அப்படின்னா வாரத்துல வெள்ளி இனிமே வராதா சார்' என்று பதிலுக்கு அவரை கலாய்தனர் குழந்தைகள்.அதே சமயம் பார்த்தசாரதி வானத்திலுள்ள நட்சத்திரங்களை லேசர் பாயின்ட் மூலம் அடையலாம் காட்ட பிரமித்து பார்த்தனர் .கூட்டமாயிருப்பது வேட்டை நட்சத்திரம், தலை, கை , வால்,சேர்ந்த மாதிரி தெரியுதே அது தான் நாய் நட்சத்திரம் என்று வான உலா நடத்திக்காட்டினார் பார்த்தசாரதி.
அடிப்படை வசதியில்லாத ஊரில் வளரும் குழந்தைகளுக்கிடையேயான அறிவியல் ஆர்வம் பிரமிப்பூட்டியது.தெலஸ்ஸ்கோப்பில் வியாழனை காண வெளி இரவில் நான், நீ, என முண்டியடித்து நின்றது மனதிற்கு நம்பிகையைத்தந்தது
நிச்சயம் இந்த ஊரில் உள்ள யாரோ ஒரு குழந்தை நாளைய அறிவியல் படைப்பிற்கு வித்தாய் இருக்கலாம்.
இரவு ஒன்பது மணியில் இருந்து பதினொரு மணிவரை மார்க்கெட்டிங் வகுப்பு இருந்தபோதும்,தங்கள் ஓய்வு நேரத்தை அறிவியலை வளர்க்கும் பணிக்காக பயன்படுத்துவோம் என்று காத்து இந்த நிகழ்சிக்கு ஏற்பாடு செய்த கிரேட்லேக்ஸ் மாணவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
' உண்ண உணவில்லை
உடுக்க உடையில்லை
உறங்க உறைவிடமில்லை
உயிரைத்தவிர உயர்வாய் எதுவுமில்லை
உதவும் உள்ளம் உள்ளதா
அவர்களுக்கு அறிவியல் அறிவைத் தா !

எழுதியவர் : வைதேகி பாலாஜி (17-Feb-12, 3:25 pm)
பார்வை : 212

மேலே