கர்மயோகா
கிரேட்லேக்ஸ் இன்ஸ்டிட்டீயுட் ஆப் மேனேஜ்மெண்ட் (கர்மயோகா திட்டம்)
கிரேட்லேக்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ளது. வகுப்பறையில் கற்பிக்கும் பாடம் நடைமுறைக்கு பயன்படுமா? கற்றதை நடைமுறைப்படுத்த செயல்முறையில் ஈடுபட வேண்டும்.
நீச்சல் பற்றிய அறிவை வகுப்பறையில் கற்பிக்கலாம்,நீந்த கற்றுக்கொடுக்கமுடியாது. நீச்சல் பழக நீச்சல் குளம் தேவை என்பது பேராசிரியர் வெங்கட் .R கிருஷ்ணன் அவர்களின் கருத்து, இவர் எண்ணத்தின் வடிவம் தான் 'கர்மயோகா திட்டம்'.எ.பி.ஏ பாடப்பிரிவில் சிறப்புப் பாடமான 'உபநிஷத்'தை போதிக்கும் பேராசிரியரான இவர் கல்லூரிக்கு அருகேயுள்ள 20 கிராமங்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார் மாணவர்கள் தங்கள் ஒய்வு நேரத்தை வாரத்தில்
ஒரு நாள் கட்டாயம் கிராம முன்னேற்றத்திற்காகப்
பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் முன்னேற்றம்,மாணவர்களுக்கு கல்வி,இயற்கைமுறை விவசாயம்,மருத்துவமுகாம்,அறிவியல் அறிவு போன்றவை மாணவர்கள் செயல்படுதியுள்ளதிட்டங்களில் சில.
'கர்மயோகா திட்டத்தை' இங்கு பகிர்ந்துக் கொள்வதின் நோக்கம்- மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்னலமற்ற சேவை மனம் வேண்டும் என்பதர்காகத்தான்.
'கரமயோகாவை முழுமையாக அறியவேண்டுமா?
எழுதுங்கள்
எழுதுகிறோம்.....
‘சேவை
மனிதன் செய்வதல்ல
மனது செய்வது’.
'மனிதா
மன நிம்மதி வேண்டுமா
மனிதனுக்கு உதவு’