சந்தப்பாடல்கள் – 2

சந்தப்பாடல்கள் – 2

(இது இலண்டன் தமிழ் வானொலி ஓடி விளையாடு பாப்பா நிகழ்வில் 23-5-2004 ல் ஒலி பரப்பானது.)

சந்தப்பாடலான தாலாட்டின் அடிப்படை பிற்காலப் பாடசாலையின் இலக்கிய அனுபவத்திற்கு அத்திவாரமாகிறது.

சந்தப் பாடல், கும்மிப் பாடல், சிந்துப் பாடல் என்று இசைப் பாடல்கள் மூன்று வகையாகிறது. சந்தப் பாடலில் சந்த ஓசையே முக்கியமாகிறது. (இதனுள் கீர்த்தனம் என்பதையும் இணைக்கின்றனர். இது ஒரு பெரிய ஆய்வுக் களமாகும்.)

”..குழந்தைகள் தாய்மாரின் தாலாட்டில் கண்ணயர்ந்து துயில்கின்றன. இவ்வகைப் பண்பட்ட இன்னோசையின் அமைதியைத் தமிழிலக்கணத்தில் ‘வண்ணம்’ என்பர். தமிழில் நூறு வகை வண்ணம் உண்டு;. ஓவ்வொன்றும் செவிக்குணவு தருவன.” என்று யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கூறுகிறார்.
(அருணகிரிநாதர் திருப்புகழும் வண்ணச் சந்தமுடையது.)
மூன்றிலிருந்து ஏழு வயதுக் குழந்தைகளுக்கு நகை, வியப்பு, அன்புச் சுவை மலிந்த பாடல்கள் மிக வாய்ப்பானவை என்றும் இவர் கூறியுள்ளார்.

இவ்வகைச் சந்தப் பாடல்களைக் குழந்தைகளுக்கு அனைவரும் பாடி பல திறமைகளுக்கு தூண்டுதலைக் கொடுப்போமாக.

எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்குரிய பிள்ளைகளுக்கு விவரணப்பாடல்கள், வண்ணப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்களையும் கொடுக்கலாம். இதை அவர்கள் விரும்புவார்கள்.

பதின்நான்கு முதல் பதினெட்டு வயதுப் பிள்ளைகள் காதல், வீரச் சுவையை மிக விரும்புவார்கள். அன்பு, சத்தியம், நேர்மை, அடக்கம், பொறுமை, ஒற்றுமை முதலிய பண்புகள் வளரும் பருவம் இதுவாகும்.

நீதிப் பாடலுள் அநீதிகள் பொதிந்த பால்களையும், கதை நிகழ்ச்சிப் பாடல்களையும் கற்றுக் கொடுத்தல் நன்மை தரும். பாடல்களை மனப்பாடம் செய்வதற்கும் பொருளறிந்து பாடி மகிழவும் இந்தக் காலம் ஏற்ற பருவமாகும்.

முற்றும்.



ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2004.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (18-Feb-12, 12:02 am)
பார்வை : 318

சிறந்த கட்டுரைகள்

மேலே