இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

தமிழ்

வற்றாமல் சுரக்கும் தேனருவியாய்

வரலாறை சுமந்து வரும் மலையருவியாய்

சிந்தனையில் வைத்தோர்க்கு சுவைத்திடும்

சீரிளமையோடு மனதில் சிரித்திடும்

தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்

சிலப்பதிகாரம் சொல்லும் நீதி

மன்னர் புகழ் பாடும் பரணி

இளையோர் காதல் சொல்லும் அகநானூறு

இறைவன் புகழ் பாடும் திருமறைகள்

வாழ்க்கை வழிகாட்டும் திருக்குறள்

வரலாறு சொல்லும் கல்வெட்டுகள்

நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஓலைச்சுவடிகள்

சுதந்திரதாகமூட்டும் பாரதி பாடல்கள்

தமிழை உயிரில் கரையவைக்கும் பாரதிதாசன் கவிதைகள்

இனிக்க ஒலிக்கும் கண்ணதாசன் பாடல்கள்

இணையத்தில் மட்டுமன்றி இனி பாரெங்கும்
பரவும் இந்த அமுத மொழி

இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

எழுதியவர் : (4-Sep-10, 11:29 am)
பார்வை : 3242

மேலே