வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
"உதிர்த்த உடனே அம்மா என்ற என் மொழி
மழலையாய் நான் கற்ற மழலை மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!
பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி
கவிதைகளை உருவாக்கிய கன்னி மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!
பகுத்தறிவை வளர்க்கும் பக்குவ மொழி
உலகை ஆளப் பயணிக்கும் மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!
இதயங்களை இணைக்கும் இனிய மொழி
இணையத்தில் வளரும் செம்மொழியாக இங்கே!
இணைக தமிழ் இதயங்கள்! வளர்க தமிழ்!
வாழ்க தமிழ், வளர்க தமிழ்!