கடல்

ஆர்பரிக்கும் அலைகள்
ஏராள உயிர்கள்
உனக்குள்ளே .........
சிப்பியின் முத்துக்கள்
சீதனமாய் மீன்கள்
நீ தந்தாய்..........
அழுகாத குப்பைகள்
இரசாயண கழிவுகள்
யாம் தந்தோம் ......
ஏற்றுக்கொண்டாய்
ஏமாளி என்று நினைத்தேன்
காலங்கள் கடந்தது
கோபம் வந்தது ஒருநாள்
எங்கள் ஊரே தொலைந்தது அந்நாள் .
உணர்த்திவிட்டு சென்றது
ஆழி பேரலை
"சாது மிரண்டால் காடு கொள்ளாது
கடலோ மிரண்டால் நாடே இல்லாது "

எழுதியவர் : ஜெயகாந்தன் .பொ (4-Sep-10, 5:23 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 458

சிறந்த கவிதைகள்

மேலே