குப்பைத் தொட்டி

(குப்பைத்) தொட்டிக்
குழந்தைகளை
அரவணைக்கும் தாய்...
தெரு நாய்களின்
பொதுக் கூட்ட
மையம்...
பழையப்
பொருட்களின்
பாதுகாப்பு அறை...
குப்பைப் பொறுக்குபவர்களின்
வேலை வாய்ப்பு
அலுவலகம்...
பிச்சைக்காரர்களின்
முச்சந்திக்
கோவில்...
காக்கைகளின்
சம விருந்து
உணவுக் கூடம்...
கிழிந்த
ஆடைகளின்
ஜவுளிக் கடை...
உடைந்தப்
பொருட்களின்
கண்காட்சி நிலையம்...
குட்டிப் புழுக்களின்
கூட்டுக்
குடும்பம்...
பொருள் தேடி
வருவோருக்கு
இல்லையென்று சொல்லாத
பொது நல வாதி...