பார்க் ஸ்ட்ரீட் கற்பழிப்பு
பார்க் ஸ்ட்ரீட் கற்பழிப்பு
கொல்கத்தா நகரமது கண்ணயர்ந்த நேரமதில்,
அன்னை, மகளிருவர் மனையதனில் பின்வைத்து,
நள்ளிரவில் கும்மிருட்டில் டிஸ்கோ வந்தடைந்து,
மது அருந்தி, போதையது மயக்குமுடன் தலைக்கேற,
பேதை கன்னியவள் தன்மானம் தானிழந்து,
மனமதனில் சூழ்ச்சியுடன் கபடமுற்ற வாலிபர்கள்,
ஓநாய் கூட்டம்போல் வெறியுடனே பின் சூழ,
சிந்திக்கும் திறமைதனை செயலற்று போயிழந்து,
ஓநாய்கள் வண்டியதில் வலுகட்டாயத்துடன்,
மான் போன்ற மங்கையின் மானமதை தான் புசிக்க,
வேண்டுமா இத்தகைய வேகமும் வாழ்கையும்?
இளம்பிஞ்சு போன்ற இரு மகள்கள் மனம் நோக,
தாய் உள்ளம் பரிதவித்து மானம் பறிபோக,
விட்டில் பூச்சியது விளக்குடன் விளையாடுவதுபோல்,
அவசியமா இந்த அந்நிய கலாச்சாரம்?
நாடதற்கே தாயென்ற வரியமைத்த நம் பாரதி,
இன்றிருந்து இத்தகைய செயல்களை கண்டிருந்தால்,
வந்தே மாதரம் என்ற சொல்லதனை அழித்திருப்பார்!
வேதனையுடன் முகம் புதைந்து கதறி அழுதிருப்பார்!