சொல்லத்தான் நினைக்கிறன்

என் உணர்வுடன் கலந்தவனை
என் இதயத்து சந்தங்களை ரசிக்கவைத்தவனை
என்னை எனக்கு அடையாளமிட்டவனை
எனக்கும் மறுபிறவி உண்டென உணர்தியவனை
என்னை மீண்டும் மழலையாக்கியவனை
தொலைபேசியில் ரசிக்கும் - என்
தொலைதூர தோழனிடம்
சொல்லத்தான் நினைக்கிறன் ............
நான் நட்பில் மூடியிருப்பது
உன்மேல் கொண்ட நேசம்என்பதை - அனால்
முடியவில்லையடா.......
உன்னுடன் பேசுகையில் மட்டும்
என் வார்த்தைகள் விடுப்பெடுத்துக்கொள்கின்றன
ஆனாலும் .......
மனதோரமாய் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
ஐ லவ் யூ டா செல்லம் ................;

எழுதியவர் : (25-Feb-12, 3:16 am)
பார்வை : 319

மேலே