அன்பு தெய்வம்

அன்பு நெஞ்சங்களே..... எங்கே இது எந்த மெட்டில் எழுதி உள்ளேன் எனக்கண்டுபிடிங்க பாக்கலாம். என்ன? கண்டுபிடிச்சாச்சா? very good . அப்ப நீங்க கெட்டிக்காரர்தான். okvaa .

இதோ பாடல் வருகிறது.


அன்பு தெய்வம் என் அன்னை நீயே.
உன்னை நாளும் போற்றிப் பரவிடுவேன்
(என் அன்பு )

என்னைக் கண்ணெனக் காத்திட்டப் பெருந்தகையே
உன் பாதம் போற்றிடுவேன்
என் சுவாசம் யாவும் என்றும் நீயே
என் வாழ்வும் வழியும் நீயே..............

நான் ஏற்றம் பெற்றிட புகழ் சாற்றி நின்றிடப்
போற்றிப் புரந்தனையே..........
உன்னைப் பைதமிழ் சரத்தால்
போற்றி நிற்ப்பேன்.................(என் அன்பு)

பல பண்ணால் உன் புகழ் பாடி நிற்கும்
உன் சேயேனை தினம் காப்பாய்
தூய உள்ளம் கொண்டனை அன்புத் தாயே
துயர் யாவும் போக்கிடுவாய்........
தினம் செந்தமிழ்த் தேனால்
உந்தன் பதம் போற்றிடும் எனைக்காப்பாய்
என் மதினில் நிறைத்திடும் இறை நீயே................
(என் அன்பு)

எழுதியவர் : ஸ்ரீ G . S . விஜயலட்சுமி (26-Feb-12, 9:07 am)
Tanglish : anbu theivam
பார்வை : 206

மேலே