புரட்சிக் கொழுந்தே !
என் அன்பே! என் ஆருயிரே!
பண்பாட்டின் உச்சமே !
அடிமைத்துவத்தை தூக்கியெறிந்த அரசியே !
ஆகாயத்தின் அடிநிலவை தொட்டுவிட
துடியாய் துடிக்கும்
இளமையின் இளவரசியே !
முடியாது என்ற வார்த்தையே என் வாழ்கையில் கிடையாது
என முழக்கமிடும்
முயற்சியின் சிம்மாசனத்தில் பயணம் செய்பவளே!
வறுமையோ ,வர்க்க பேதமோ
என் இலட்சியத்தை தடை செய்யாது
என சுனாமிபோல் சீறுபவளே!
நீ அறத்தில் அன்னைதெரசவாக துடிக்கிறாய்
வீரத்தில் ஜான்சி ராணியாக
விலைமதிப்பில்லா சிந்தனையில்
சரஸ்வதியின் சாம்ராஜியத்தில்
சகலகலா வள்ளியாக
சரித்திரம் படைக்க
சபதம் கொண்டுள்ளாய் !
ஓ!புரட்சி கொழுந்தே
புறப்படு புதுமை சமூகத்தை
பூலோகத்தில் உதயமாக்க !

