நட்பின் நினைவுகள்
நகங்களும் சதைகளும் போல உறவாடிய உறவுகள்! கூச்சலிட்டதற்காக கூச்சம் இல்லாமல் வாங்கிய தண்டனைகள்! இதே மேடையில் வாங்கிய பரிசுக்காகவும், ஆடிய ஆட்டத்திற்காகவும், பேசிய வார்த்தைக்காகவும். பெற்ற கைத்தட்டுக்கள்! ஒருவாய் சோற்றுக்காக! அறுபது கைகள் போட்ட சண்டைகள்! பாடாய் படுத்தினாலும் பாடு பட்டு portionஐ முடிக்கும் ஆசிரியர்கள்! சிற்றுண்டிச் சாலையில் சில்லறையில்லாமல் நண்பர்களின் வருகைக்காக காத்திருந்த தருணங்கள்! இதுவே எங்கள் உலகம், இதை பிரிவதோ பெரும் சோகம், இனி, வாங்கிய திட்டும்! தாங்கிய கொட்டும்! என் நினைவுகளில் மட்டும்

