தலைக் கவசம் அவசியம் - கட்டுரை
தலைக் கவசம் அவசியம் என்பதில் எந்தத் தவறும் இல்லை.
தரமான தலைக் கவசம் வாங்கி அணிய வேண்டும்.
பார்வை மங்கலானவர்கள், சளித் தொந்தரவு உள்ளவர்கள் தற்காலிகமாக இருசக்கர வாகனம் ஓட்டாமல் இருக்கட்டும்.
எந்தவித சமாதானமும், நடைமுறையில் ஏற்படும் விபத்தில், தலைக் காயத்திலிருந்து காப்பாற்றாது. கீழே விழாத வரையில் ஒன்றுமில்லை.
வண்டி ஓட்டிகள் - லாரிகள், பஸ், ஆட்டோக்கள் - அனைவரும் பந்தயத்தில் கலந்து கொள்வது போல்தான் விரைவாக ஓட்டுகிறார்கள்.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள்தான் கவனமாக தலைக் கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
விழுந்து தலையில் அடிபட்டால் மருத்துவச் செலவு லட்சத்தைத் தாண்டும். பிழைத்தாலும் நரம்பு மண்டலக் குறைபாடு இருக்கலாம்.
பஜாஜ் ஸ்கூட்டர்களில் இரண்டு தலைக் கவசம் வைக்கும் வகையில் பெட்டி இருக்கும். (Helmet Box)
ஒவ்வொரு இருசக்கர வாகனத்திலும் தலைக் கவசம் பாதுகாப்பாக வைக்க, மழை காலங்கள் உள்பட, தகுந்தபடி பெட்டிகள் அமைக்க வேண்டும்.

