நான் பெற்றேடுக்காததால்
குழந்தை இல்லாதவள்
பெற்றெடுத்த மகனுக்கோ
மகளுக்கோ வைக்கப்
படவேண்டியது பெயர்!
நான் பெற்றேடுக்காததால்
எனக்கு வைக்கப் படுகிறது
மலடி என்று.......
கோவில் கர்ப்ப கிரகங்களில்
பாலாபிஷேகம் செய்கிறேன்...
என்றாவது என் கோவில்
கும்பாபிஷேகம் காணும் என்று......
புழு பூச்சி வைத்தால் கூட
பிள்ளை என நினைத்து
வளர்த்து விடலாம்.....
அதற்கும் நான்
புதைக்கப் பட வேண்டும் போல......