காதல் ஒரு மனநோய்

நீ உன் பேரை உச்சரிப்பதை விட
அவள் பேரையை அதிகமாய் உச்சரிப்பாய்
உன் மன ஓட்டங்களில் எப்பொழுதும் அவளின்
நினைவலைகள் ஓடி கொண்டே இருக்கும்
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அர்த்தம் அற்றதாய் தோன்றும்
பலர் சிரித்து பேசும் இடங்களில் நீ மட்டும்
மௌனமாய் இருப்பாய்
உன் கண்கள் விழித்திருக்கும் போது கூட
கனவுகள் காண்பாய்
இவை அனைத்தும் உண்மை என்றால்
நீ காதலில் விழுந்துவிட்டாய் என அர்த்தம்
நிச்சயம் உன் அடுத்த இருப்பிடம் நிச்சயம் ஒரு மனநோய் மருத்துவமனை ஆகதான் இருக்கும்
ஏனென்றால் காதலும் ஒரு வித மனநோயின் அறிகுறிதான்

எழுதியவர் : gandhikarunanithi (10-Mar-12, 2:33 pm)
சேர்த்தது : gandhikarunanithi
பார்வை : 238

மேலே