தனி வீட்டுமனைகள்
கருவறையை பங்கிற்று கைவிரல் கணக்கிட்டு பெற்றெடுத்தார் -அரசு
தவறில்லை என்றுதான் தடுக்காமல் விட்டுவிட்டார் -உடல்
தரும்வரை பால்கொடுத்து உயிர்தன்னை வளர்த்துவிட்டார் - அடை
மழையில் நனையவிட்டு அடுப்புக்கு விறகுத் தேடுவார் -அதுபோல்
வரைமுறை வகுக்காமல் வாழ்வினை மேற்கொண்டதால் -இன்று
தலைமுறை எல்லாமே தனிமனை வேண்டுதே -உழவு
நடும்வரை இந்நிலமோ உயிரோடு இருந்தது -மனிதா!
அறுபதுதான் உன்வாழ்க்கை அதற்க்கு இந்நிலத்தை நீகொன்றதேன் ?