விடியலின் தேடலில்
தீதென்றும் சூதென்றும் காலமென்றும்
வாதைஎன்றும் வழியென்றும் வகுத்து
தந்தவன் வள்ளுவன் திராவிடன்!!!!
அழகென்றும் அணியென்றும் சுவைஎன்றும்
விதியென்றும் வினைஎன்றும் விளித்தவன்
தொல் தமிழன் தொல்காப்பியன்!!!
நீதியையும் விதியையும் விளைவித்த
வித்தகர் வாரிசின் வாழ்வு?
விளைநிலமான பூமி கொலைகளமாகி
பயிராடிய பாதையெல்லாம் உயிர்ஓடி
உதிர கடல் பெருங்கடலை
பெயர்க்கிறது!!!
புத்தக பூக்களில் புதைவெடியும் !
சத்திர சாவடியில் சடலங்களும்!
வைத்திய சாலையில் வாழ்க்கைகளையும்
அடமானம் வைக்கும் அலைகரங்களே!!!
ஆழியில் அமிழ்ந்துபோகும் ஆயிரமாயிரம்
அறிவு சுடர்களும் அகல்விளக்குகளும்
பூத்து குலுங்கவேண்டிய பூக்களும்
புரிந்த குற்றமென்ன பிறந்ததா?
.
.
.
இல்லை தமிழனாய் பிறந்தது!
தரமற்ற தரணியில் திராவிடனாய்
பிறந்தது!!
புத்தக பந்தங்கள் தோட்டாக்களின்
சிதறடிப்பில் சிதைகின்றன!
பள்ளி சாளரங்கள் பதுங்குகுழியில்
உறைந்து போகின்றன!
ஊமை காயங்கள் கூட
உணர்வில் வெளிப்படும்
ஊமையாய் போன என்
உடன் பிறப்புகளே!!
உதிர சூட்டில் கதகதப்பும்!
பிரேத கூரையில் வாழ்விடமும்!
உறவுகளின் ஊனத்தில் மருத்துவபட்டயமும்!
எப்படி ஏற்கின்றாய்????
உணவில் சதை துணுக்கும்
காற்றில் கந்தக நெடியும்
நீரில் உதிர கலவையும்
எப்படி ஏற்கின்றாய்?
எண்ணிரண்டு திசைகளிலும் ஏழுகண்டங்களிலும்
கேட்டிராத பார்த்திராத பண்பாடு
அசுர அவியலில் அவிந்துபோகும்
ஆம்பல் மலர்களை அனைத்துகொள்ளுங்கள்!!!
பிராந்திய பஞ்சாயத்துகளில் பல்லிளிக்கும்
பதர்களே உன்இனம் வதை படுகிறது!
உன் உறவு உயிர்விடுகிறது
உறைந்து போகாத உதிரம்
உனக்கேன்?
உள்ளுக்குள் துடிக்கும் இதய
கீதத்திற்கு பதிலாக மரணபயம்
ஒலிப்பது என்ன நிலைமை???
இனபடுகொலையில் இல்லாமல் போக
கிள்ளு கீரயல்ல உன்இனம்!
கீர்த்தியும் பெருமையும் வாய்ந்த
தமிழனடா நீ!!!
என்விழி தேடலில் உன்
சுதந்திரம்தான் எனது!!!
கண்ணீர் துளிகளால் கலையமுடியாது
கரங்களை கோர்ப்போம்!
தமிழனாய் தமிழ் மண்ணில் நிலைப்போம்!!!
விடியலுக்காக நானும் என் மக்களும்.......

