என்னை காக்க வந்த தேவதையோ ..?
நரக நெடுஞ்சாலையில்
என்னை புயலென தாக்கி
சொர்க்கம் அனுப்பியவளோ ?
தினம் காலையில்
என்பெயர் சுப்பிரபாதம் பாடி
என்னை எழுப்ப போரவளோ ?
மடிமீது என் தலை
சாய்த்து தினம் தாலாட்ட
வின் தாண்டி வந்தவளோ ?
திருடி என் இதயத்தை
இதயத்தினுள்
சிறை வைத்தவளோ ?
கண்களால் கதை கூறி
என்னை தினம் தினம்
ஆள வந்தவளோ ?
அவள் காதலின் பெயரில்
என்னை காக்க வந்த
தேவதையோ ?