எழுத்துவில் என்னுடைய நூறாவது கவிதை. அம்மா..!

பத்துமாதம் நித்தமும்,
பத்திரமாய் நீ சுமந்து
பத்தியங்கள் பல கொண்டு
பக்குவமாய் பெற்றெடுத்தாய்...

வயிற்றின் சுவர்களிலே
வலிமையாய் நான் உதைக்க,
அழவில்லை
மாறாக ஆனந்தப்பட்டாய்...!

உலகம் நான் காண
உயிர்வலி நீ பொறுத்தாய்....
மறுபிறவி நீ எடுத்து
மயக்கம் உற்றாய்...

இடப்பக்கம் நான் கெடக்க,
அழுகுரல் நீ கேட்க,
மயக்கத்தின் பாதியில்
நீ என்னை தேடினாய்...

இந்தப் பிஞ்சின்
பஞ்சு விரல் தீண்டலில்
பிரசவ வலிகளை நீ மறந்தாய்...

என்னைக் கொஞ்சி கொஞ்சி,
நீ குழந்தையானாய்...!

ஊர் உறங்கும் நேரத்திலும்,
உறங்காமல் நீ முழிச்ச...
பாதி இரவிலும் பாதுகாவலானாய்...

பசி பொருக்க மாட்டேன்னு
மடியில் போட்டுக் கொண்டு,
உன் மார்பில்
நான் பாலுண்ண
நீ பசியாறினாய்...!

நான் அழுதால் நீயும் அழுதாய்,
நான் சிரித்தால், நடந்தால்..
நீ ரசித்தாய்...!

!...அம்மா என்றழைக்க
உலகை நீ மறந்தாய்...!

இந்த மழலை சொல் கேட்டு
குழலிசைகளை வெறுத்தாய்...
கவலைகளை துறந்தாய்...

சூடு பட்டா அழுவேன்னு
கை வைத்து சூடு பார்த்து
வென்னீரில் குளிக்க வைப்பாய்,
பின்பு,
தலைவாரி பூச்சூடி
கன்னத்தில் பொட்டு வைப்பாயே...!
அது கண்ணுக்குள்ள இருக்குதம்மா...!
இன்றும் காட்சியாய் தெரியுதம்மா...!

....கொஞ்சம் வளர்ந்தேன்....

நெறிகளை நீ சொல்லி
நேர் வழியில் நடக்க வைத்தாய்....

கத்தரிக்காய் வெட்டி வைச்சு
மல்லாட்டை பயிர் அரச்சு
கருவாடு கிள்ளி போட்டு,
மூன்றையும் கூட்டு சேர்த்து
வைப்பாயே ஒரு குழம்பு...

நாக்கெல்லாம் எச்சில் ஊறும்,
குழம்பெல்லாம் தேன் ஓடும்....
வீடெல்லாம், வீதியெல்லாம்
வாசம் வீசும்....

ஊரெல்லாம் உன் பெருமை
உயரத்தில் அது பறக்கும்....!

பொன்னி நெல்லு படி எடுத்து,
அரிசி உடையாம,
பார்த்து பார்த்து பதமாய்
உலக்கையை நீயே போட்டு,
அரிசியாக்கி ஊறவைத்து
உலையில் போட்டு
சாதம் செய்வாய்...

சாதமும் குழம்பும் நீ பிசைவாய்..

சூடு தாங்க மாட்டேன்னு
ஊதி ஊதி ஊட்டி விட்ட,
சாதம் அது நெனப்பிருக்கு,
நெஞ்சில் இன்னும் நெலச்சிருக்கு....!

அடி பட்டு நான் வந்தால்
அடிக்காம நீ அழுவ....
அது ஆறும்வரை
களிம்புகள் நீ வைப்ப....
அதை இப்ப நெனச்சாலும்
காரணமில்லாமல்
கண்ணீரு வருதம்மா....!

என் அவசரத்திலும்
பொறுமை பொறுமைன்னு நீ சொன்ன,
அதனால வெற்றிகள் நான் பெற்றேன்.
என் மீது பொறாமைகள் பிறர்பட,
பெருமைகள் நீ கொண்ட...!

கண்ணாடி போல நீ எனக்கு,
ஆனாலும் கண்ணாடி இல்லை...
ஏன்....?
என் கோபங்களை
உட்கிரகித்தாய்.,
மகிழ்ச்சிகளை பிரதிபலித்தாய்...!

எனக்காக இவையாவும்
செய்தவளே......!

கண்ணீரு
¤¤கவலை
¤¤¤¤அழுகை
இதெல்லாம் கடந்து நீ வந்த....

மகிழ்ச்சியாய் மட்டும் நீ இருக்க...
இனி என்ன நான் செய்ய...?..!

...¤¤"..அம்மா.."¤¤...
அன்பின்
அழிக்க முடியாத
அடையாளம்.........!

என்றென்றும்
லோகுசரன்..ஆ

எழுதியவர் : லோகுசரன்.ஆ (26-Mar-12, 8:31 pm)
பார்வை : 340

மேலே