குழந்தை தொழிலாளி
பார் புகழும் பாரினிலே நல்லரசாம் நம் அரசே
ஏற்றுமதியோ ஏராளம் இறக்குமதியோ தாரளம்
உற்பத்தியோ உயரே
தீடிரென்று கண் விழித்தான்
அவன் கன்னத்தில் ஓட்டை குடிசையின்
ஒரு சொட்டு நீர்
குடி போதையில் அவன் தந்தை
அடுப்படியில் அவன் தாய்
அவனோ குழந்தை தொழிலாளியாய்
மீண்டும் கண்களை மூடினான்
இருள் மட்டும் தெளிவாக தெரிந்தது

