எயட்ஸ்
பள்ளி பருவமதில் பயின்றேன் முதலிடமாய்
வாலிப பருவமதில் வளர்ந்தேன் முதலிடமாய்
திருமண பருவமென்று வந்ததோ என்னவோ
ஒரு நிமிட சலனம் ஓராயிரம் ஆசைகள்
சிறகுகள் விரிந்தது சலனமில்லாமல்
மொழி உதிரும் மொட்டுகளின்
ஈரம் இடம் மாறியது சத்தமில்லாமல்
கண் மூடி திறந்தேன்
எல்லாம் முடிந்தாகிவிட்டது எழுந்தென்
மரணத்தை விலை பேசிவிட்டு
கல்லறையும் எனக்கு முதலிடமாய்