கல்லறை கவிதை

அவள் வேறு ஒருவனை திருமணம்
செய்து நடந்து செல்லும் வழியில்
என்னால் அவளுக்கு பூக்கள்
தூவப்பட்டு இருக்கும்
அது என் இறுதி ஊர்வலத்தில்
தூவப்பட்ட பூக்களாக இருக்கும்.

ஒரு வேளை அவள் மணவறையில்
தூவப்பட்ட பூக்களும்
என் கல்லறையில் தூவப்பட்ட
பூக்களும் காதலர்களாக இருக்கலாம்
ஒன்று அவளைப் போல்
மணவறை சென்றுவிட்டது
மற்றொன்று என்னைப் போல்
கல்லறைக்கு வந்துவிட்டது.

அவள் திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட வேண்டும் என்பதற்காக
என்னை சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டாள்.

மீண்டும் நான் பிறந்து வந்து
அவளைக் காதலிப்பேன்,
அவளால் சாகடிக்கப்படுவேன்
என் இரண்டாவது கவிதை எழுதுவதற்காக,,,,!!!

எழுதியவர் : சுதீஷ் கவி (26-Mar-12, 7:15 pm)
Tanglish : kallarai kavithai
பார்வை : 212

மேலே