எங்கே...??
இப்பொழுதெல்லாம் ஏனோ
கவிதை எழுத தோன்றுவதில்லை...?
காரணம் தேடியது கண்கள்...
இதமான இயற்கை எங்கே...
வளமான வயல்வெளி எங்கே...
மாசற்ற மழைத்துளி எங்கே...
மரகிளைகள் எங்கே...
கனமில்லா காற்று எங்கே...
கள்ளமில்லா காதல் எங்கே...
எதிர்பார்ப்பில்லாத எதார்த்தம் எங்கே..
தோள்கொடுக்கும் தோழமை எங்கே...?
வரட்சில்லா வயிறு எங்கே...
வறுமையில்லா வாழ்க்கை எங்கே...
தவறில்லாத தமிழ் எங்கே...
தன்மானமுள்ள தமிழன் எங்கே...??
கவிதை வரவில்லை
கண்ணீர்தான் வழிந்தது...