சொல்லாத காதல்
கன்னியவள் நட்பானால்
கல்லூரி வாழ்க்கை
தொடங்கும்போது
விடுமுறைளும்
கல்லூரி வந்தேன்
காரணம் கேட்காதீர்
கொஞ்சம்
கூச்சமாய் இருக்கிறது
படிக்கதான் என்று சொல்ல
நட்பை விதைத்தவள்
நெஞ்சில் வளர்ந்தால்
மரமாக .
காலையில் வகுப்பறை
எனக்காக காத்திருக்கும்
தனியாக
மலையில் நான் விட்டு
வருவேன் வகுப்பறைஏய்
தனியாக
நண்பர்கள் கேட்டால்
நட்பு மட்டுமே
என்று சொல்லும் மனம்
நாளடைவில்
நட்பு காதலானது
கனவினில் அவள்
வந்தபோது
அவளிடம் சொன்னேன்
சிரித்தால்
சிதறியது என் மனம்
சிறகடித்து
பறந்தேன் வானில்
காதலை சொல்லவில்லை
காதலை கண்டேன்
அவளது சிரிப்பில்
வாயோடு சேர்ந்து
கண்களும் சிரித்தது
அவள் சிரிப்பதை நிறித்தினால்
கல்லூரி
வாழ்க்கை முடிந்தது
இன்று வரை
மனதில் நிற்கிறது
அவளை விட
அந்த சொல்லாத காதல் .