பாரதியின் கேள்விகள்.

பராசக்தி பெற்றெடுத்த
மூத்த மகன் பாரதி
பாரதத்தை நேர் வழியில்
செலுத்த வந்த சாரதி

முண்டாசில் விதைத்த இவன்
மூளை என்ற விதையாலே
அறுத்ததெல்லாம் பார்போற்றும்
அர்த்தமுள்ள கவிதானே

இவன் காட்டில் வைத்து விட்ட
கனலைத்தான் தேடினான்...
இப்போ இவன் இருந்திருந்தால்
என்ன கேள்வி கேட்டிருப்பான்?

திரவத்தால் முடியாதுன்னு
தீய ஊத்தி எழுதி வச்சேன் - இன்னும்
சாதி இங்க எரியலையே
சாதிக் கட்சி எத்தனைன்னா??

விவேகமா நூறு பேர்
வேணும்னு கேட்டானே
விவேகானந்தன் போய் நாளாச்சு
நூறு பேர எங்கேன்னா??

விளையாடச் சொன்னப் பாப்பா
வாலிபனாய் வளர்ந்தாச்சு -ஆனா
விளையாட்ட மட்டும் ஏன்
நீ இன்னும் விடலேன்னா??

பள்ளிக்கூடம் இல்லாத ஊரத் தான்
கொளுத்தச் சொன்னேன் - ஏன்
பள்ளிகூட உள்ளேயே பூவ
வச்சு எரிச்சேன்னா??

எத்துனையோ பெரியவர்கள்
எழுதி வைத்த அறிவுரைகள்
கட்டி வாழும் அறநெறியை
கற்றுத்தந்த அறிஞர்கள்
காற்றினிலே தூசு போல
கலைந்து எங்கோ போயாச்சு

கேணியில உள்ள யான
எல்லாத்தையும் தெரிஞ்சுதான்
பத்திரமா என்ன மட்டும்
பரலோகம் அனுப்பிடுச்சா??

எழுதியவர் : கலாப்ரியன் (20-Apr-12, 9:53 pm)
பார்வை : 323

மேலே