இதுவும் ஒரு காதல் !!
உன்னை பார்த்த முதல் நொடியில் என்
கண் இமைகள் செயலற்றுப்போனது
தினம் என் இரவில் கனவுகள் முளைத்தது
உன் அழகை ரசிபதர்க்காகவே
என் இதயம் என்னிடம் மன்றாடியது உன் உடன்சேர உன் மீது காதல் கொண்டு
அப்பாவிடம் போராடி சண்டையிட்டு
அம்மாவின் சிபாரிசுடன் உன்னை என்னதாக்கினேன்
முதல் தீண்டல் உலகம் மறந்து போனேன்
முதல் பயணம் என்னை மறந்து போனேன்
சில நாட்களில் உன்னை புரிந்து கொண்டேன்
வெகு விரைவாக நீயும் பழகிவிட்டாய்
நிலவின்றி பல இரவுகள் முடிந்ததுண்டு
நீ இன்றி என்னக்கு ஓர் பகலும் முடிந்ததில்லை
நான் செல்லும் வழியில் நீ துணை நின்றாய்
தடங்கல்கள் பல நீ உடன் கடந்தாய்
வெயில் மழை பாராமல் நான் அலைந்தேன்
வழியன்றி உன்னையும் உடன் அழைத்தேன்
இலக்குகள் பல நான் அடைந்தேன் விரைவாக
நீயன்றி இது சாத்தியம் இல்லை நிஜமாக
நேரங்கள் பல நீ காத்திருந்தாய் எனக்காக
நேரங்கள் பல நான் ஒதிக்கினேன் உனக்காக
இன்றொடு 5 வருடங்கள் முற்றம்,
நாட்கள் சென்றதே தெரியவில்லை சற்றும்
வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம்
உன்னை உடன் அழைத்து செல்ல முடியாத நிர்பந்தம்
நான் இன்றி உன்னை கவனிக்க ஆளின்றி
உன்னை விற்க்கிறேன் துளியும் மனமின்றி
என் இரு சக்கர வாகனமே !!!!!!!