அவனுக்கு இரத்தம் வேறு நிறம்...

இன்னமும்-

சட்டை அணிய முடியாத
கட்டுப்பாடும்-

சாம்பலான பின்
தனி இடமும்-

குளிக்க அனுமதியற்ற
குளக்கரைகளும்-

குழந்தைகளைப் பிரித்துவைக்கும்
குலமும்-

தட்டிக்கு வெளியே தொங்கும்
தலித் டம்ளர்களும்-

ஊமையாய் அழுது சொல்லும்-

இரத்தம் ஒரே நிறம் இல்லை என-

இந்த நூற்றாண்டிலும்.

எழுதியவர் : rameshalam (8-May-12, 12:03 pm)
பார்வை : 215

மேலே