கேள்வி...?...

அம்மா கேட்டால்
அழுகிறது குழந்தை
தாயை கேட்க்க
தெரியவில்லை அதற்க்கு
தந்தை கேட்டால்
தலைக்குமேல் வளர்ந்தவன்
மௌனமாகிறான்
மகன் கேட்டால்
தவிக்கிறார் தந்தை
ஆசிரியர் கேட்டால்
பதில் தெரியாதவன்
விழி பிதுங்குகிறான்
மாணவன் கேட்டால்
மரியாதை குறைந்ததாய்
மதிமயங்குகிறார் அவர்
முதலாளி கேட்டால்
அடக்குமுறை என்று
கொதிக்கிறான் தொழிலாளி
தொழிலாளி கேட்டால்
தொல்லை நீ தொலைந்து போ
என்று சொல்கிறார்
மேல் அதிகாரி கேட்டால்
ஆணவத்தில் கேட்பதாய்
அரற்றுகிறான் கீழ் அதிகாரி
அப்படியே அவனும் கேட்டால்
அடங்க மறுப்பதாய்
அதட்டுகிறார் அவர்
மக்களிடம் கேள்வி கேட்க
அரசியல்வாதி நினைக்காதபோது....
அவர்களிடம் கேள்விகேட்க்க
மக்களுக்கு அருகதை இல்லை
கேட்டாலும் பதில் இல்லை
அவர்கள் கடவுள் மாதிரி
கேள்வியே....?
உன்னை யாருக்கும்
பிடிக்கவில்லை
என்னைப்போல்...
உன்னை யாருக்கும்
பிடிக்கவில்லை
அதற்காக நாம்
அழிந்தா போகமுடியும்
நம்மை யாரும்
அழிக்கத்தான் முடியுமா?