அக்னிச்சடலம் அழுகியஉடல்கள்

அய்யோ!அய்யோ!
பொணம்!பொணம்!
அம்மா!....அம்மா!.....
என்னை
காப்பாத்துங்க!
என்னை
காப்பாத்துங்க!
யாரது!யாரது!
இரத்தம்!இரத்தம்!
அய்யோ!
என்க்கு மயக்கம்
வருகிறதே!..
என்ன இது!என்ன இது!
வெறிச்சோடிய
தெருவிலே வெறிநாய்கள் கூட்டம்!...
லொல்!..லொல்!..
வொவ்!...வொவ்!.. புழுமொய்த்த
தலைகளை கவ்விக்கொண்டு
திரியும் நாய்கள்!...
நான் எங்கு நிற்கிறேன்?
என்ன நடக்கிறது இங்கு?
அய்யோ!..
சதைப்பிண்டங்களை
வைத்து சத்தியம்
செய்யப்பட்ட
தெருக்கல்லறைகள்!
சிதறிக்கிடப்பதெல்லாம்
உதிரங்களை காய்ச்சி
உரித்தெடுக்கப்பட்ட
கருவரைகள்!
கருவறையிலே
எரிக்கப்பட்டதெலலாம்
பறிக்கப்பட்ட
உரிமைகள்!
சதைக்கணம் தாங்காத பிணக்காடுகள்!
பிணமார்பை பிச்சுத்திங்கும்
புருவம் தெரிக்காத
கருவறைப்பிஞ்சுகள்!
கத்திக்கும்
கருங்குருதிக்கும்
கலவிப்பயணங்கள்!
மார்புக்கூட்டை
சமைத்துண்ணும்
நரகதேசம்!..அது
மண்டைஓடுகளை
மறைத்து தின்னும் மனிததேசம்!
இரத்தத்தால்
காய்ச்சப்பட்டிருக்கும்
யுத்தப்பொழுதுகள்!
இரத்தத்தால்
நிரப்பப்பட்டிருக்கும்
மூவர்ணங்கள்!
சபதங்களை இனப்படுகொலைக்கு
இழுத்துச்செல்லும்
சாமச்சுடுகாடுகள்!.....
அதிலே
தேசத்தை விட்டு
பிறிந்தோரின்
அகதிச்சத்தங்கள்!
வேகாத எலும்புகளை
எடுத்துதிங்கும்
சாபவெறிகள்!
பகைக்கனல்
பற்றிக்கொள்ள
வெந்தஎலும்புகளை வெட்டித்திங்கும்
வேகாதநரிகள்!
புதைத்ததையும்
எடுத்து நாவில்
புணரவைக்கும்
அந்நியநரிகள்!
ஒட்டுண்ணிதேசம்,
சொட்டிகிடப்பதெல்லாம்
சத்தியசவங்கள்!
புளித்த வாசத்தை
புதுபிக்கும்
சவப்புழுக்களின் புதுமனைபுகுவிழாக்கள்!
விழாவில் எரியும்
விலாஎலும்புகள் தான்
வீதிவிளக்குகள!
அனல்களுக்குள்
உயிர்எரியும்
சத்தங்கள்!
அண்டைலோகத்து
ஆவிகளின் வரவேற்புகள்!
இரத்தநிலத்தில்
நிலுவைஜீவன்கள்!
தொண்டைக்கும்
நெஞ்சுக்கும்
மரணப்பயணங்கள்!
துக்கச்சடங்குகளை
துவக்கிவைக்கும்
சங்குகள்!
சங்குகளின்
ஊழையிடும்
சத்தங்களால்
மரணஓலங்கள்!
நாடிச்சலங்கைகளின்
கடைசிச்சாபங்கள்!
ஆத்மாக்களின் அடர்த்திகள்,
ஆன்மாக்களின் ஆழங்கள்!...அவற்றை
அள்ளிக்குடிக்க வரும்
அணுகுணடுகள்!
தன்னைத்தானே
மாய்த்துக்கொள்ளும்
தன்னுரிமைகள்!
வாந்தியும்
பேதியும்
சவங்களின் தொட்டில்கள்!
சிரங்குகள்தான்
நிலத்தின்தளங்கள்!
நிலங்கள் எல்லாம்
சிரங்குகளின்
செதில்கள்!
பரலோகத்தில்
சேர்க்கைகள் நடைபெறும்!...அதற்கு
இரத்தக்களத்திலே
விண்ணப்பப்படிவங்கள்
வீசியெரியப்படும்,
அதில் கையெழுத்திட.
கைகளும், வெட்டி
அனுப்பப்படும்!
அரியணைக்கு
பலிகொடுக்க அறுத்து
எரியப்படும்
மனிதத்தலைகள்!
தலைகளை கவ்விக்கொண்டு
தன் பசி தீர்க்கும்
வஞசகநரிகள்!
வாய்க்கரிசிசீதனம் கூட
வயிர்எரிந்து போகிறதே
என்று,
வழுவிழந்து கிடக்கும்,
வலதுகை விரல்ஜோடிகள்!
பச்சைஉடலையும்
பிச்சுத்திங்கும்
பரலோகப்பஞ்சம்!...
பெத்தஉடலையும்
பிச்சுத்திங்கும்
செத்தஉடலும் பஞ்சம்!...
மயான இராகத்தை
தியானம் செய்யும்
மண்டை ஓடுகள்!...
முகாரிஇராகத்தை
முடிந்துவைத்து,
மாகாணம் எல்லாம்
மயான வீடுகள்!...
வறுமைகாட்டெறிகளின்
மனவெறிசத்தங்கள்!
மனிதகாட்டெறிகளின்
இனவெறியுத்தங்கள்!
அய்யோ!
என்னால் யாரையும்
காப்பாற்ற
முடியவில்லையே!
சரித்திரத்தில் சாகாத புத்தகங்கள்-இன்று
சடலங்களாய்
எரிகிறதே!
என்ன செய்வேன் நான்!
பேனாவே!
வா செல்வோம்,
பாரதத்தாயிடம்!...ஆம்
மண்ணில் விழுந்த
உயிரணுக்களை
மடியில் ஏந்தி கருவில்
விதைத்திருப்பாள்!
வா செல்வோம்,
பாரதத்தாயிடம்!.....
பேனாவே!
ஒவ்வொரு எழுத்தும்
என் உயிர்குடித்தல்லவா
உருவாகியிருக்கிறது!...
ஆழ்ந்த சிந்தனையில்,
என் ஆத்மா
அரைப்பிரேதமாய்
துடித்தது தெரியுமா!
உடலைசுற்றியும்,
மயானச்சுடர்
வியர்த்தது தெரியுமா!...
ஆனாலும் நான்
யாரையும் காப்பாற்றவில்லையே!
அய்யோ!... துரோகம்செய்தேன்! பாவி
துரோகம் செய்தேன்!
என் உடற்கூடை
உடைத்து
உடுக்கையில் அடைக்கிறேன்!.
உலக்கையில் இடித்து
உண்மையாய்
இறக்கிறேன்!...
உயிர் பிரிந்தால்-அதை
உண்மை
வீரனுக்குள்
நுழைக்கிறேன்!.!...
ஒரு சடலமாவது
உயிர்த்து எழட்டும்!...என
நினைக்கிறேன்!...
(கற்பனையென
நினைத்து கை தட்டி
விடாதீர்கள்)
பாவம் பாரதம்!...