மனிதன் யார்

மனிதன் யார்

கடவுளின் படைப்பில்
விலங்கு, பறவை ,
எல்லாம் அப்படியே பார்வையில் ,
ஏனோ மனிதன் மட்டும் கண்ணில் படாமல் !

ஊமையின் உபாசனம் ,
குருடனின் வழிகாட்டல் ,
செவிடனின் இசை ஆர்வம் ,
என எல்லாம் நம்பிடலாம் ,
மனிதனை மனிதனாக பார்பதற்கு பதில் !

தனக்கொன்று நேர்ந்தால்
தரணியையே வெறுப்பான் ,
மற்றவனுக்கு என்றால்
மார்தட்டி சிரிப்பான் !

பணம் என்ற பார்வையில்
மனம் தெரியாமல் போகும் ,
சினம் என்று வந்துவிட்டால் ,
மிருகங்களும் தோற்கும் !

அதிகார போர்வையில்
ஆணவம் தலைதூக்கும் ,
அடங்கி போனபின்பு ,
அத்தனையும் செயலிழக்கும் !

இன்பத்தில் தோல்கொடுப்பான்
துன்பத்தில் கால் இழுப்பான் ,
நன்றி விசுவாசத்தில்
நாய் கூட சற்று மேல் !

வேட்டைமீது குறி இருக்கும் ,
வேண்டும்போது அன்பிருக்கும் ,
அத்தனையும் ஆனபின்பு ,
நீ யார் என்பது அடுத்த கேள்வி !

மனிதம் இருக்காது ,
மதம் இருக்கும் ,
அன்பு இருக்காது ,
ஆசை இருக்கும் ,
குணம் இருக்காது
கோபம் இருக்கும் !

தொடரும் !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-May-12, 10:52 pm)
Tanglish : manithan yaar
பார்வை : 285

மேலே