நானும் பெண்

அன்னையின் கருவில்
பிறந்து
கடல்தாயின் மடியில்
தவழ்ந்து
தந்தை பிடித்துவந்த
மீனால் வளர்ந்தேன்


பருவம் வந்ததும்
பால்நிலவுடன் காதல்
கொண்டு,
மீன்களை தூது
அனுப்பி
காதல்ரசம் பொழிய
கவிதை
படித்து வந்தேன்

அதிகாலை எழுந்து
அன்னையின் முகம்
தேடும் வேலையில்................



கடல் தாயின்
கண்ணீர் துளி
என் பாதத்தை
நனைத்தது..............!!!!!!!

என்
அன்னை ,தந்தையை
பரித்துகொண்டதால்
அழுததோ ..............!!!!!!!!!
ஒன்னும் புரியவில்லை
எனக்கு .

எந்தன்
கண்ணீர் துளிகள்
கடல் தாயின்
கண்களுக்கு தெரியவில்லையோ .................!!!!

ஆழியலைகளின் உதவியால்
அநாதை ஆக்கப்பட்ட
எனக்கு,
ஆதரவுகரங்கள் நீட்டப்பட்டது
இருட்டு அறைக்குள்
மட்டும்.

திசைகள் தெரியாமல்
கலங்கி நின்ற
எனக்கு,
காகிதபணங்கள் நீட்டப்பட்டது
இருட்டு அறைக்குள்
மட்டும்.

இன்று

தந்தை வயதில் இருப்பவனும்
என்னை ,
தாயாக்க நினைக்கிறான்

தமையன் போல தெரிந்தவனும்
என்னை
அனுபவிக்க துடிக்கிறான்




இன்று




சில பிணம் தின்னும்
முதலைகளின் காம
பசிக்கு உணவாகி
கிடக்கிறேன்

ஆம்

ஒவ்வொரு முறையும்
கசங்கி கிடக்கும்
என்னை
கசங்கா மலர்
என,


என்
காதில் காதல்
பேசும் ,

ஆடவர்கள்
இருக்கும்
வரை

பணத்தட்டுப்பாடு
கிடையாது
எனக்கு

எந்தன் காயம் பட்ட
மனதிற்கு
கண்ணீர் துளிகளே மருந்து
எனக்கு....,


இப்படிக்கு
கடல் தாயின்
பிள்ளை

எழுதியவர் : (10-May-12, 7:00 am)
சேர்த்தது : வாலிதாசன்
Tanglish : naanum pen
பார்வை : 222

புதிய படைப்புகள்

மேலே