எறும்பு கற்பிக்கும் பாடம்
மிகச் சிக்கலான வேலையைக் கூட
ஒழுங்கு முறையுடன் செய்பவை.
உணவு இருக்குமிடத்தைக் கண்ட
தலைமை எறும்பு தன்
சீடனைப் பின்னால்
அழைத்துச் செல்லும்.
சீடன் எறும்பு தலைமை எறும்பைத்
தொட்டதும் தன்
பயணத்தைத் தொடரும்.
உணவு இருக்குமிடத்தை
தலைமை வழி காண்பிக்க..
அதை சீடன் கற்றுக் கொள்ளும்
பங்கின் அழகினை
நாம் என்றும்
கடைபிடிக்க வேண்டியது
நாம் கற்பிக்கும் பாடம் தான்
எறும்பின் பாதையே...

