இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
விழிநீரில் தெரித்த ஓவியமே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என் மனதில் படர்ந்த பனித்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
மௌனம் விளிக்கின்ற மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என் இரவுகள் இமைகண்ட முழுநிலவே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இமையின் கருவினில் தான் பிறந்து
என் இதயத்தின் துடிப்பில் நீ கலந்தாய்....!
உன் நிழலின் பிம்பம் உரசுகையில்
என் நினைவினில் உன்னை நீ அறிவாய் !
உன்னில் என்னை நானறிய
உன் உயிரில் உறைவதை நீ உணர்வாய் !
உன்னை உணரும் போதினிலே
என் வெட்கம் விடுதலை செய்திடுவாய் !
உணர்வின் ஈரம் உதிரத்திலே
நாணும் பெண்ணே நீ அறிவாய் !