வேண்டாமோ அட்சயபாத்திரம்!!

ஏன் இந்த மாயவலை? பெற்றோர்களிடம் ஏன் இந்த வேண்டாத மனோபாவம்! அரசப்பள்ளிகளை விடுத்துதனியார்பள்ளிகளை நாடுவதன் காரணமென்ன? இந்த மனோபாவத்தை வளர்த்தது யாரோ?அரசு பள்ளிகளில் படித்து மாவட்ட ஆட்சியாளர்களாகவும்,பெரிய பதவிகளில்  உள்ள பலரை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம். வேண்டாத மோகத்துக்கு ஆசைப்பட்டு தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அறிவுடைமை ஆகுமோ?

மாதம் முப்பதாயிரம் சம்பளம்  வாங்குபவர்களின் பிள்ளைகள் முதல் வேலைக்குச்சென்றால் தான் உணவு என்ற நிலையில் உள்ள ஏழைப்பெற்றோர் வரை ஏன் இந்தமாற்றம?வேனில் தன் மகன் பள்ளி சென்று திரும்புவது தான் பெற்றோரின் மன மகிழ்ச்சிக்கு வித்திடுமோ?்
           ஆண்டுக்கு பல முறை கல்வி கட்டணம் வாங்கும் தனியார்  பள்ளிகளை விட  இலவச கல்வி வழங்கும் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு இன்று மிகச்சிறப்பாகவே உள்ளது .இலவசமாக வழங்குவது ஒருவேளை தரமாக இருக்காது என்ற எண்ணம் மக்கள் மனதில் படிந்துவிட்டதோ?
             தனியார்  பங்களிப்புடன் நடத்தப்படும்  பள்ளிகளில் பல ஆயிரங்களைச்செலுத்தி சேர்க்கை பெறும் நாம்,பள்ளிக்கு அனுப்பும் போது உடன் நம்முடைய எதிர்பார்ப்புகளையும் அனுப்புகறோம்.முதல் தரம் வாங்க பிள்ளைகளை விரட்டுகிறோம்.இரண்டாம் தரம் வாங்கினாலும் பாராட்ட மனமில்லை நம்மில் பலருக்கு!

     இன்றைய வளர்ந்த சமுதாயத்தில் பாட அறிவோடு,வாழ்க்கை நெறிகளும் போதிப்பது இன்றியமையாதது.சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ,மாணவனால்  பெண் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார்.காரணம், ஆசிரியர் படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தினாராம்.ஆம்.இன்றைய மாணவனின் மனநிலை இவ்வாறு தான் உள்ளது.மாணவர்களிக்கு வாழ்க்கை நெறிகளை புகட்ட தகுந்த சூழல் இல்லை.

தெலைக்காட்சியை திருகினால் அதில் வன்முறை,கொலை,கொள்ளை,ஏமாற்றுதல்,என மாணவனைச்சுற்றி ஏகப்பட்ட நிகழ்வுகள்.அவர்களுக்கு தேவை ஒரு ஆரோக்கியமான சூழல்.வருடம் முழுவதும் படித்ததை மூன்று மணி நேரத்தில் மதிப்பிட்டு தேர்ச்சி வழங்குகிறார்கள்.வேண்டாம் இந்த அவல நிலை!
          பெற்றோர்களே!உங்களோடு சேர்ந்து,கைகோர்த்துக்கொண்டு அரசுப்பள்ளிகளும் வளர்ந்து இருக்கிறது.குறைந்தபட்சகற்றல்,செயல்வழிக்கற்றல்,சமச்சீர்,முப்பருவ கல்விமுறை என பல நிலைகளில்  பல்வேறு மாற்றங்களை பெற்று வருகிறது.

மேலும்,படைப்பாற்றல்,தியானத்துடன் கூடிய வாழ்க்கை கல்வி முதலிய கல்வி முறைகளை  அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.இத்துடன் மாணவர்களுக்கு சத்துணவு தினம் ஒரு முட்டையுடன் வழங்கப்படுகிறது.

மேலும் அவர்களது கல்விக்குத்தேவையான நோட்டு,புத்தகம்,காலணி,வண்ணச்சீருடை,பை,கருவிப்பெட்டி,உதவித்தொகை என     அனைத்தும்அரசுப்பள்ளிகளில் வழங்கப்படுகிறது.இவை அனைத்தும் உங்களின் வரிப்பணத்தில் ! ஏன் பயன்படித்த தயக்கம்! பல ஆயிரங்களை  செலவு செய்து,சுமையை ஏற்றாதீர்!
   அரசுப்பள்ளிக்கு அழைத்து செல்லுங்கள்! அரசின் செலவினங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!!

இது நம் ஒவ்வொருவரின் கடமை!

Sent from Yahoo! Mail on Android

எழுதியவர் : கொடுமுடி கேசவன் (10-Jun-12, 7:24 pm)
பார்வை : 253

மேலே