ரௌத்திரனின் பொன்மொழிகள் (பகுதி-14 ) - என்ற படைப்பில் எழுந்த கருத்துப்பரிமாற்றம்

ரௌத்திரனின் பொன்மொழிகள் (பகுதி-14 ) - என்ற படைப்பில் எழுந்த கருத்துப்பரிமாற்றங்களைத் தொடர்ந்து......

முதலில் ஒன்றைத்தெளிவாக கூறிக்கொள்கிறேன். இக்கருத்துப்பரிமாற்றம் எண்ணவோட்டத்தின் எழுத்தாளர்களுக்கு இடையிலேயேயின்றி தனிப்பட்ட யாரையும் குறிப்பதில்லை.

இப்படைப்பில், நான் யார் மனதையும், எவ்விதத்திலும், நேராகவோ, மறைமுகமாகவோ புண்படுத்தும் எண்ணத்தில் எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனெனில், இன்றும், இதுவரையும், இனியும், இத்தளத்திலுள்ள அனைவரையும் தோழர்/தோழி களாகவே நான் நினைப்பவன்.

இனி தொடர்வோம் கருத்துப்பரிமாற்றத்தை........

"ராமனைப் போல் கணவன் வேண்டும் என்று சொல்லும் ஒவ்வொரு பெண்ணையும் தீக்குளிக்கச் சொன்னால்தான் புத்தி வரும்! " - ரௌத்திரன்

"ரௌத்திரன் ஏன் இப்படி? களங்கம் இல்லாதவளே அவளை போன்ற கணவனை எதிர்ப்பார்ப்பாள்." - தோழி லலிதாவின் கூற்று.

"கண்ணகி போல மனைவி வேண்டும் என்று சொல்லும் ஆண்கள் தீக்குளிக்க வேண்டும் என்பதை போல உள்ளது கருத்து...
ராமரும் வேண்டாம் கண்ணனும் வேண்டாம் அன்பான, அக்கறையோடு, பெண்களை மதிக்கும் கணவனை தான் இன்றைய பெண்கள் எதிர் பார்கிறார்கள்..." - ரௌத்திரனின் அதே வரிகளுக்கு, தோழி ஆயிஷா பாரூக்கின் கூற்று

------------------------------------------------------------------
நானறிந்தவரையில், உண்மையில், நல்லெண்ணம், நல்லுள்ளம் கொண்ட மேற்கூறிய தோழிகளுக்கு, ரௌத்திரனின் வரிகளிலுள்ள உள்ளர்த்தம் அறியாது போயிருக்குமோ என்று நினைக்கிறேன்.
சரி, குழப்பத்தை நீக்க வழியுள்ளதா எனப் பார்ப்போம்.

கவிஞனின் வரிகளை,
மேலோட்டமாகபார்த்தால் மறையும் மேகங்கள்தான்;
அவ்வாறில்லாமல்,
உள்நோக்குவோருக்கே உலகம் தெரியும்

அதாவது, பொதுவாக, கவிஞர்களின் வரிகளிலுள்ள பொருளை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. ஆதலால், உள்ளர்த்தத்தை அறிய, அவ்வரிகளை மீண்டும், மீண்டும் படிக்க நேரிடும்.

என் பார்வையில், கீழுள்ள, ரௌத்திரனின் வரிகளுக்கு விளக்கம் யாதெனில்,

"ராமனைப் போல் கணவன் வேண்டும் என்று சொல்லும் ஒவ்வொரு பெண்ணையும் தீக்குளிக்கச் சொன்னால்தான் புத்தி வரும்! " - ரௌத்திரன்

A. பிரேம் குமாரின் விளக்கம்:
கற்பை காப்பதும் ஒரு வேள்விதான்.
அத்தகைய வேள்வியில்,
தவறான பல ஆசைகளையும்,
பாலியலை தூண்டும் ஆசைகளையும்,
பிறருக்கு துன்பம்தரும் ஆசைகளையும்
- ஆகுதிகலாகயிட்டு, எரித்து (தீக்குளித்து) கற்பை தூய்மையாக வைத்திருக்கும் சீதை போன்றவளுக்குதான் ராமன் போன்ற கணவன் கிடைப்பான்.

(பொதுவாககூறினால், ஆசைகள்தான் "நீ". சீதை, தவறான இத்தகைய ஆசைகளை எரித்ததனால்தான் ராமன் கிடைத்தான்)

(சீதையின் காலம்மட்டுமல்லாது, காலம் காலமாக, கற்புக்கு சொந்தக்காரி பெண்; கற்பு - பெண்)

கற்பை மனதளவிலும், உடலளவிலும் இழந்த ஒருவளுக்கு, ராமன் கிடைக்க வாய்ப்பேயில்லை.

ஆகையால், வாழ்க்கையில் உண்மையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவோருக்கு (ஆணோ/பெண்ணோ), ஒவ்வொருநாளும், தீக்குளிப்பு போராட்டமே. ஆனால், உண்மைக்காக போராடுவதில் ஆனந்தமே.

இத்தகைய மறைமுகமான பொருளைத்தான் ரௌத்திரனின் வரிகளில், என் மனம் படித்தது.
உங்களிடம் உரைத்தது.

இன்றைய அநாகரிகஉலகில்,
கற்பின் தூய்மையை எடுத்துரைப்பவர் எத்தனைபேர்
கற்பின் தூய்மையை கற்றவர் எத்தனைபேர்
கற்பின் தூய்மையை கடைபிடிப்பவர் எத்தனைபேர்
கற்பின் கருவறையை பூஜிப்பவர் எத்தனைபேர்
கற்பின் உன்னதத்தை போற்றிப்பாடுவோர் எத்தனைபேர்

ஆணான எனக்கே கற்பை போற்றும்போது
மனம் ஆனந்தம் கொள்ளுதே;
கற்பின் குலவிளக்கு பெண்ணாயிற்றே,
சீதைபோன்றொரு பெண்ணின் ஆனந்தத்தை சொல்லவாவேண்டும்.....

பெண்தான் கற்புக்கு சொந்தக்காரி,
ஆனால், இன்றைய உலகில் (எழுத்து உலகிலும்),
கற்பை கவிதைகளில் அதிகம் பாடாது
காதலை யல்லவா பாடுகிறாள்...
சொல்லவே மனம் கசக்கிறது.
(மறந்துவிடாதீர்கள், கற்புதான் அனைத்திற்கும் மூலாதாரணம் (உள்ளர்த்தம் உண்டு))


கடைசியாக,
இறைவன் படைப்பில்,
அழகுக்கு சொந்தக்காரி பெண்
அதுவே அவளுக்கு ஆபத்தென்றும் அறிவாள்
அறிந்தும்,
அநாகரிகஉலகில் துப்பட்டாயின்றி திரிவாள்...
வேதனைக்குரிய தொடக்கம், அவளுக்கு.
(எதிர் வருவோருக்கும் முகசுருக்கம் ஏற்படுகிறது, வருந்தத்தக்க விஷயம்)

எழுதியவர் : A பிரேம் குமார் (12-Jun-12, 1:54 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 349

மேலே