தூரத்து மோகம் காண விழைகிறேன்
சிறு மரங்கள் சில்லென உதிர்க்கும் பனிப் போல் என் இனியக் காதல்,
சிறகின்றி பறந்திட வைக்கும்,
முறையின்றி முழு வாழவை மாறிட வைக்கும்,
துறவென்பதும் துறப்பதில் கொணட நாட்டமே,
காதல் என்றுவரின் மற்றவை துறப்பதில் இல்லை ஒரு வாட்டமே,
கலக்கும் இட்த்தினில் காதல் முளைக்கும்,
கலக்கம் இன்றி இதயக் கதவைத் துளைக்கும்,
தேனோடு இனிப்பைப் போல பெண் மானோடு என் வாழ்வு,
தூராத மேகத்திலும் ஈரங்கள் இருக்கும் அதை உன்
தூரத்து மோகத்திலும் நான் காண விழைகிறேன்,
மறுப்பதில் உனக்கு ஒரு சுகம் என்றால் நான் கூறுகிறேன்
உனக்கு என் மீது காதல் இல்லை என்று.