தொலைந்த நட்பு!

இருபத்துமூவர் நாங்கள்
அந்த நிறுவனத்தில்
ஒன்றாக சேர்ந்தபோது...
எங்கள் அலுவலக நட்பு
ஆருயிர் நட்பாக மாறியது
ஓரிரு மாதங்களில்
எங்களுக்கே தெரியாமல்...

சில ஆண்டுகள்
உருண்டோடின
சில இரவுகள்
கோப்பைகளோடு
சில பகல்கள்
சினிமாக்களோடு
சிற்சில சண்டைகள்
பற்பல சந்தோஷங்கள்...

வெளிநாட்டுக்குப் பறந்தனர் நால்வர்
திருமணம் நிமித்தம்
பிரிந்தனர் இருவர்
நிறுவனம் பிடிக்காமல்
மாறினர் சிலர்
தேங்கிய பலரோடு
தேங்கிவிட்டேன் நானும்!

தொலைந்துபோன நட்பெல்லாம்
ஒவ்வொருநாளாக
வெவ்வேறு நாட்களில்
திரும்பக் கிடைத்தனர்.
பாவம்
நாங்கள்தான்
அடர்த்தியான தொடர்பின்மையால்
நட்பைத் தொலைத்து
புன்னகைக்கிறோம்
நாகரிகத்தை மனதில்கொண்டு...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (13-Jun-12, 3:49 pm)
பார்வை : 612

மேலே