போதும்.. போதும்..

காசு கண்டால்
காதுவரை சிரித்து வரும்
சொந்தம் வேண்டாம்...

வறுமை பிணியால்
குடிக்கும் இரவு கஞ்சிக்கும் பங்குகேட்கும்
நெஞ்சம் போதும்..!!

துக்கம் நேர்ந்தால்
முகமூடிக்குள் முகஸ்துதி பாடும்
வேசங்கள் வேண்டாம்...

வலி வந்தால்
வலிய தேடிவந்து தோள் சாய்க்கும்
நேசங்கள் போதும்..!!

கண்ணீர் கதையிலும்
சுவாரசியமாய் சந்தேகங்கள் கேட்கும்
உறவுகள் வேண்டாம்...

விழிநீரை சுண்டிவிட்டு
கைகள் கோர்த்து, காதுகள் கொடுக்கும்
நண்பர்கள் போதும்..!!

திசைகாட்டி இல்லாத கப்பல்
நீலக் கடலிலும்
நட்பு கொள்ளாத மனிதன்
வாழ்க்கை கடலிலும்

தத்தளித்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதற்கு
மாற்றுக் கருத்து உண்டோ..!?

எழுதியவர் : சு.முத்துக்குமார் (14-Jun-12, 10:26 am)
Tanglish : pothum pothum
பார்வை : 404

மேலே