நம் எல்லோருக்கும்

5 - வயது குழந்தைக்கு கல்வி கேட்டால்
5 - இலக்கத்தில் கிடைக்குமென விரல் காட்டுகிறது

நல்ல வழி காட்டும் என்று வந்தால்
செம வலி காட்டுகிறது புத்தகச்சுமை

கேள்வி கேட்டால் விழிவிரிய பதில் தருபவர்கள்
அர்த்தம் கேட்டால் விழிபிதுங்கி நிற்கிறார்கள்

பள்ளி தரும் சோதனையில் உயர்ந்து நிற்பவர்கள்
வாழ்க்கை தரும் சோதனையில் துவண்டு போகிறார்கள்

மாற்றம் தேவை - தெளிவாய் மக்கள்
கல்வி முறையிலா இல்லை கல்வி துறையிலா - குழப்பத்தில் அவர்கள்.

எழுதியவர் : சு.முத்துக்குமார் (13-Jun-12, 9:59 pm)
சேர்த்தது : சுமுத்துக்குமார்
Tanglish : nam ellorukkum
பார்வை : 241

மேலே